எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
எண்ணில் அடங்கா ஸ்தோத்திரம் – தேவா
ennnnil adangaa sthoththiram - thaevaa
என்றென்றும் நான் பாடுவேன்
ententum naan paaduvaen
இந்நாள் வரை என் வாழ்விலே
innaal varai en vaalvilae
நீர் செய்த நன்மைக்கே
neer seytha nanmaikkae
1. பூமியில் வாழ்கின்ற யாவும்
1. poomiyil vaalkinta yaavum
அதின் மேலுள்ள ஆகாயமும்
athin maelulla aakaayamum
வானதூதர் சேனைகள் யாவும்
vaanathoothar senaikal yaavum
தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில்
thaevaa ummaip pottuthae - ennnnil
2. சூரிய சந்திரரோடே
2. sooriya santhirarotae
சகல நட்சத்திர கூட்டமும்
sakala natchaththira koottamum
ஆகாயப் பறவைகள் யாவும்
aakaayap paravaikal yaavum
தேவா உம்மைப் போற்றுதே – எண்ணில்
thaevaa ummaip pottuthae - ennnnil
3. காட்டினில் வாழ்கின்ற யாவும்
3. kaattinil vaalkinta yaavum
கடும் காற்றும் பனித் தூறலும்
kadum kaattum panith thooralum
நாட்டினில் வாழ்கின்ற யாவும்
naattinil vaalkinta yaavum
நாதா உம்மைப் போற்றுதே – எண்ணில்
naathaa ummaip pottuthae - ennnnil
4. பாவ மனுக்குலம் யாவும்
4. paava manukkulam yaavum
தேவா உம அன்பினை உணர்ந்தே
thaevaa uma anpinai unarnthae
சிலுவையின் தியாகத்தைக் கண்டு
siluvaiyin thiyaakaththaik kanndu
ஓயா துதி பாடுதே – எண்ணில்
oyaa thuthi paaduthae - ennnnil
https://www.youtube.com/watch?v=cQzQyIv4jPk
Comments
Post a Comment